ஜெய்சங்கர் நினைவு நாள்

 


இன்று தமிழ் திரையுலகில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஜெய்சங்கரின் நினைவு நாள். ஜூன் 3, 2000. இவர் பல சமூக சேவைகளை மூன்றாம் நபர் அறியாமல் செய்தவர். தயாரிப்பாளர்களை கஷ்டப்படுத்தாதவர். ஜெண்டில்மேன் என புகழப்பட்டவர்.

மற்ற நடிகர்களெல்லாம் தங்களது பிள்ளைகளை நடிகர்களாக்கினாலும் இவர் மட்டும் தனது பிள்ளையை ஒரு கண் மருத்துவராக்கி சமூக நலப் பணிகளில் ஈடுபட வைத்தார். ஜெய்சங்கர் தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் பூந்தமல்லியில் உள்ள விழி இழந்தோர் பள்ளிக்குச்சென்று அந்த மாணவர்களுடன் சில மணி நேரங்களைக் கழிப்பது வழக்கம். அவரது மகன் டாக்டர் விஜய்ஷங்கர் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் பாம்க்ரோவ் அருகில் (யெஸ் பேங்க் எதிரில்) சங்கர் ஐ கேர் என்ற கண் மருத்துவமனையை நடத்திவருகிறார். இதன் கிளை ராமகிருஷ்ணா நகரில் உள்ளது. இவ்விரு கண் மருத்துவ மனைகளிலும் வருமானம் குறைந்த ஏழை மக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் அல்லது கட்டணமே இல்லாமல் மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஜெய்சங்கரின் நினைவு நாளில் இந்த இரு மருத்துவமனைகளிலும் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,