புன்னகை சுமப்போம். புன்னகை சுமக்க வைப்போம்.

 அகால மரணங்கள் மீண்டும் மீண்டும் கற்றுக்கொடுக்கும் செய்/செய்யாதே பாடங்கள் ஏராளம். பிரசவ வைராக்கியம் போல..மயான வைராக்கியம் போல..சில நாட்களில் மறந்துவிடுகிறோம்.

எல்லோரும் அறிந்தும் அலட்சியமாய் இருக்கும் விஷயங்களில் சிலவற்றை ஒரு நினைவூட்டலாக பேச விருப்பம்.
உடற்பயிற்சி கொஞ்சமாவது செய்வோம்!
ரொம்பவும் ஒடி ஓடி உழைக்க வேண்டாம்!
வியாதிகளின் வைத்தியத்திற்கு எதையும்விட முன்னுரிமை தருவோம்.
குடும்பத்திற்கும், சொந்த சந்தோஷங்களுக்கும் நியாயமான நேரம் தருவோம்!
வருமானத்திற்குள் வாழ திட்டமிடுவோம்.
கடனில்லாமல் லட்சியங்களை நிறைவேற்றல் நல்லது.
சேமிப்பை குடும்பத்தினரிடம் ரகசியமின்றி பகிர்வோம்.
வங்கி கணக்குகள், ஈ மெயில் துவங்கி நூறு வகை பாஸ்வர்டுகளை நெருக்க உறவுகளிடம் பகிர்ந்து வைப்போம்.
லைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் இல்லையென்றால் சிறிதளவாவது துவங்குவோம்.
அடுத்த 20 ஆண்டுகளுக்குத் திட்டமிடுவதை விடவும் அடுத்த ஆண்டு வரை திட்டமிட்டால் போதும்.
புயல், வெள்ள அபாயம் போல இப்போது மரண அபாயத்திற்கு நூறு சாத்தியங்கள் இருப்பதால் பொறாமை, ஒப்பீடு, வன்மம் எல்லாம் குறைக்கப் பார்ப்போம்.
நேரம் காரணம் காட்டி தொடராத பழைய நட்புகளுடன் மீண்டும் தொடர்பில் இருப்போம்.
எந்த உறவுடனும் விலகலுடன் கூடிய நெருக்கம் காட்ட பழகுவோம்.( சுலபமில்லை!)
யாருக்கும் உதவாத சொத்துகளை பலருக்கும் உதவவைப்போம்.
வாரிசுகளுக்கு என்று முடிவானதை வாழும் காலத்திலேயே பகிர்ந்து தருவோம்.
புன்னகை சுமப்போம். புன்னகை சுமக்க வைப்போம்.
ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் அவரவர் அனுபவத்தில் மாற்றுக் கருத்துகள் கண்டிப்பாக இருக்கும். பதிவிடலாம். ஆனால் நான் வாதிடப் போவதில்லை.

பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் பேஸ்புக் பதிவு


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,