உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
வரலாற்றில் இன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஆம் ஆண்டு ஜூன் 23 அன்று கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் துவங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் முறைப்படி வழங்கப்பட்ட பிறகு இந்த மாநாடு நடைபெற்றது. கோயம்புத்தூரில் 2010 இல் நடைபெற இருந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு ஈடாகத் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் இந்த மாநாட்டை ஒருங்கிணைத்து. இந்த மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் சேர்த்து நடத்தப்பட்டது. உலக நாடுகளில் தமிழும், தமிழரும், - உலகமயமாதல் சூழலில் தமிழ், - சிந்துவெளி எழுத்துச் சிக்கல் - தமிழ் செம்மொழியின் தனித்தன்மை என்பது உள்பட பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுகளும் விவாதங்களும் இம்மாநாட்டில் நடத்தப்பட்டன. துவக்க, நாளன்று எழிலார் பவனி அல்லது இனியவை 40 என்று அழைக்கப்படும் அலங்கார வாகன அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தமிழர்களின் இசை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் அந்த அணிவகுப்பு நடைபெற்றது
Comments