இளையபெருமாள் அவர்களின் பிறந்த தினம்

 ஜூன் 26,


தென்னாட்டு அம்பேத்கர் என்று அழைக்கப்பட்ட

இளையபெருமாள் அவர்களின் பிறந்த தினம் இன்று.

இளையபெருமாள் (ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி ஆரம்பித்து மக்களுக்காக போராடியவர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். பள்ளி முதல்வரிடம் இம்முறை குறித்து வாதாடிஅந்த தீண்டாமை முறையினை கைவிடும்படி செய்தார் அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.

இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். மேலும் 1979-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1984-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்.

முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது. தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். சாதி இந்துக்களால் புறக்கணிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேத்கர் என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,