சார்லஸ் டிக்கன்ஸ் நினைவுநாள்
இன்று உலகப் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் நினைவுநாள் ஜூன் 9, 1870. சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு என்றும் அழிவில்லை. அவ்விதம் மறையாத காவியங்களை உருவாக்கியவர்களில் ஒருவர் சார்ல்ஸ் ஜான் ஹ்ஃபாம் டிக்கன்ஸ். அவர் மறைந்து இருநூறு ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரின் எழுத்துகளின் தாக்கத்தை இன்றும் உணர முடியும்.
டிக்கன்ஸ் எழுதிய பதினைந்து புதினங்களில் தி டேல் ஆப் டூ சிட்டிஸ் (இரு பெரு- நகரங்களின் கதை), கிறிஸ்துமஸ் கரோல் (கிறிஸ்துமஸ் பாட்டு) மற்றும் கிரேட் எக்ஸ்பட்டேஷன் (பெரும் எதிர்பார்ப்பு) எனும் புதினங்கள் மிகப் பிரபலமானவை. கல்லூரிப் பாட நூல்களாகவும் இவை விளங்குகின்றன.
இன்றும் அவரது புத்தகங்கள் உலக மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றன. அவரது புதினங்களில் விறுவிறுப்பான கதையோட்டம் இருக்கும். நகைச்சுவை கலந்த பேச்சிருக்கும். தரமான வசனநடை இருக்கும். கதாபாத்திரங்கள் உயிரோட்டமாகப் பேசுவார்கள். ஏழை எளியவர்களின் - உழைக்கும் மக்களின் துயரங்களை அப்படியே எடுத்துக் கூறும் சக்தி அவருக்குண்டு. இடதுகைப் பழக்கமுடையவர்
Comments