உலக மழைக்காடுகள் நாள்
ஜூன் 22 இன்று உலக மழைக்காடுகள் நாள் மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும்.
மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.\
உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன.
மழைக்காடானது உலகின் உணவுக்கிட்டங்கியாக உள்ளது. காப்பி, வாழை, கொட்டைகள், அன்னாசிபழங்கள், கோகோ, பேப்பர், மூங்கில், இரப்பர், தேங்காய், வென்னிலா, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகள் இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவையே.
உலகின் நுரையீரல் என்று இவை அழைக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஆக்ஸிஜனின் 20 சதவீதத்தினை இக்காடுகள் வழங்குகின்றன.
உலகில் தற்போது உள்ள மருந்துகளில் 25 சதவீதம் இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும்.
இக்காடுகள் உலகில் உள்ள நீர்சுழற்சியினை சமநிலைப்படுத்துகின்றன.
பூமியில் உள்ள நீரினை உறிஞ்சி காற்று மண்டலத்தில் வெளியிட்டு மழையைப் பெய்யச் செய்கிறது.
மழைக்காடுகளில் விழும் இலைகள் பரந்து விரிந்து பெரிய பஞ்சினைப் போன்று செயல்படுகின்றன. மழைநீரினை இவைகள் உறிஞ்சி ஆறுகளாகவும், ஓடைகளாகவும் தொடர்ந்து வெளியிடுகின்றன.
மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மண்அரிப்பு, வெள்ளப்பெருக்கு, வண்டல் படிவு ஆகியவற்றைத் தடுக்கின்றன.
மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை
நாம் உண்டாக்கும் கழிவுப்பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
மக்களிடம் மழைக்காடுகளின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி மழைக்காடுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும். மழைக்காடுகள், அவற்றின் ஆச்சர்யங்கள், அழகுகள் ஆகியவற்றை நாம் ரசித்தது போல் நம் சந்ததியினரும் ரசிக்க நடவடிக்கை எடுப்போம்
Comments