வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
ஜூன் 10 - இன்று
புகழ்பெற்ற வயலின் கலைஞர் எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் பிறந்த நாள் 1931ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
🎼 இவர் தனது எட்டு வயதில், முதல் கச்சேரியை அரங்கேற்றினார். பல முன்னணி பாடகர்கள் அனைவருக்கும் வயலின் வாசித்துள்ளார். தனி வயலின் கச்சேரிகளை 50 ஆண்டுகாலம் நடத்தி வந்தார்.
🎼 இவர் பாரூர் - எம்எஸ்ஜி ஸ்டைல் என்ற புதிய பாணியை அறிமுகம் செய்தார். பத்மபூஷண், பத்மஸ்ரீ, கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, கேரள சங்கீத நாடக அகாடமி விருது, டி.சவுடையா விருது, வயலின் வாத்திய சாம்ராட், வயலின் வாத்திய சக்ரவர்த்தி, சப்தகிரி சங்கீத வித்வமணி போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
🎼 உலகம் முழுவதும் இசைக் கச்சேரிகளை நடத்தி இசைப் பிரியர்களால் 'எம்எஸ்ஜி' என பாசத்துடன் அழைக்கப்பட்ட எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் 81வது வயதில் (2013) மறைந்தார்
Comments