கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் நினைவு நாள்
கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் நினைவு நாள் ஜூன் 17, 1967 இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். கட்டபொம்மன் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். முத்துக்கவிராயர் என்பவரிடம் முறையாக இலக்கண, இலக்கியங்களைக் கற்றவர். சிறந்த புராண சொற்பொழிவாளராகத் திகழ்ந்தவர். கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வடிவங்களில் நூல் எழுதியவர்
.
கல்வி கற்க முடியாத சூழல் வாட்டியபோதிலும் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை தாயுமானவர் பாடல் முதலான நூல்களையும் வேதாந்த நூல்களயும் ஆங்கில மொழியையும் தாமாகவே படித்துப் புலமை பெற்றவர்.19ம் வயதிலேயே "ஆசிரியர்" நிலைக்கு உயர்ந்தவர். நாநலம் மிக்கவர். சிறந்த புராணச் சொற்பொழிவாளர். தமது இல்லத்திற்குத் "திருவள்ளுவர் நிலையம்" என்றும், தாம் தொடங்கிய அச்சகத்திற்கு "வாசுகி அச்சகம்" என்றும் பெயரிட்டவர். தம்நூலில் ஓரிடத்திலும் அச்சுப்பிழை வாராமல் பார்த்துக் கொண்டவர்.. மாசிலா மணிமாலை , அணி அறுபது , தருமதீபிகை, திருக்குறட் குமரேச வெண்பா ,வீரபாண்டியம், இந்தியத் தாய்நிலை , உலக உள்ளங்கள், கம்பன் கலைநிலை, அகத்திய முனிவர் , கவிகளின் காட்சி, தமிழர் வீரம் , பாஞ்சாலங் குறிச்சி வீரசரித்திரம் போன்ற பல நூல்களை எழுதியவர். "திருக்குறட் குமரேச வெண்பா" என்ற நூலில் ஒவ்வொரு குறளுக்கும் அதற்கேற்றவாறு கதை ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குறளோடு மேலும் இரண்டு அடிகள் சேர்த்து முழு வெண்பாவாகப் பாடியதோடு அதற்கான முழு விளக்கத்தையும் தந்தவர்.
Comments