இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர்.


 இந்தியாவின் முதல் பெண் ஆங்கில மருத்துவர். இந்தியா என்று அல்ல. இங்கலாந்தில் கூட. இந்த பெண்ணிற்கு முன் யாரும் மருத்துவ படிப்பு படிக்கவில்லை. அந்த பெண்மணி தான் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள். சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் இவர் மருத்துவ படிப்பை முடித்து. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார். ஆண்கள் கல்லூரியில் படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் ஒரே பெண் மருத்துவர் இவர் தான். கல்லூரியில் இவரை தனியாக ஒரு இடத்தில் அமர வைப்பார்கள். இவரை யாரும் பார்க்க முடியாத படி ஒரு திரை இருக்கும். காரணம். வடிவேல் ஸ்லாங்ல சொல்லனம்னா. பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில, பக்கத்தில் வைத்தால் என்ன? ஆகும். அதனால. இவங்களை தனியா ஓரம் கட்டினாங்களாமாம்.

இந்தியாவில் மருத்துவ படிப்பை முடித்து. மருத்துவ மேல் படிப்புக்கு இவர் இங்கிலாந்தில் உள்ள Royal London School of Medicine கல்லூரியில் விண்ணப்பித்தார். சிகப்பு கம்பளம் விரித்து. ராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி அவர்களை வரவேற்றது.

அங்கும் அதே கதை தான். ஆணாதிக்கத்தில் இந்தியா என்ன, இங்கிலாந்தென்ன எல்லாம் ஒன்னு தான். அந்த காலத்தில். தன்னுடைய மனதை அடக்க முடியாத சபல புத்தியுள்ள ஆன்கள். பெண்களை, பேய், பிசாசு என்று திட்டி ஒரு பாட்டு எழுதி விடுவார்கள். இன்றும் பெண்களை குறித்து. சினிமாவில் ஆரம்பித்து. சமூக வலை தளங்கள் வரை எவ்வளவு விமர்சனங்கள். கேலிகள், கிண்டல்கள், நக்கல்கள், நையாண்டிகள்.

பெண்ணிற்கு காதல் தோல்வி வந்தால்?

அவள் தன் சோகத்தை மறப்பதற்கு கானா மெட்டில் பாடல் பாடியதில்லை ..... வேணாம் மச்சான் வேணாம் இந்த ஆம்பளைங்க காதல் என்று. ஓட்டு மொத்த ஆண்கள் வர்கமும் மோசம் என்று முகநூலில் பதிவுகள் போடுவதில்லை. பலதரப்பட்ட மக்கள் சந்திக்கும் இணயத்தில் நாகரீகத்தை மீறி என்றும் அநாகரீகமாக நடந்து கொண்டதில்லை. அவள் கவனிக்கத்தவறியதில்லை கேட்கக் கூசும் விமர்சனங்களை . சில பெண்களும் இன்று ஆண்களை போன்றே தவறுகள் செய்வது காலத்தின் கோலம். ஆனால்? இதற்க்கான விதையை முதலில் போட்டது நமது ஆன் வர்க்கம் தான்.

இங்கலாந்தில். திரு முத்து லட்சுமி ரெட்டி அவர்கள் படித்து கொண்டு இருந்த பொழுது. அவர் உடன் படித்த அனைவருமே ஆண்கள். அன்று. அந்த காலேஜை கூட்டி, பெருக்கும் வேலையையும் ஆண்களே செய்தார்கள். முத்து லட்சுமி ரெட்டியோடு படிக்கும் சக மாணவர்களின் பெற்றோர்கள். இந்த ஒரு பெண்ணால். இந்த கல்லூரியில் படிக்கும் அணைத்து ஆண்களின் மனதும் சலனப்படுகிறது. அதனால் இவளை இந்த கல்லூரியை விட்டு துரத்த வேண்டும் என்று. டீனிடம் முறையிட்டார்கள். அதற்க்கு அந்த டீன். பெற்றோர்களிடம் சொன்ன பதில் என்ன? தெரியுமா.

அப்படியா. உங்கள் மகன்கள் யாரும் இங்கே வர வேண்டாம். வீட்டிலேயே இருக்கட்டும். இன்று. இந்த ஒரு பெண்ணை பார்த்தே உங்கள் மகன்களின் மனம் சலனபடுகிறது என்றால். நாளை உங்கள் மகன்கள் மருத்துவர் ஆனால். பல பெண்களின் நாடி பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டி இருக்கும். இத்தகைய சலன புத்தி உடைய ஆண்களுக்கு மருத்துவர் ஆகும் எந்த, வித தகுதியும் இல்லை.

இவர் வெறும் மருத்துவர் மட்டும் அல்ல. சென்னையின் முதல் பெண் துணை மேயர். சட்ட சபைக்கு போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டவர். அடையார் கேன்சர் இன்ஸ்ட்டிடியூட் இவர் நிறுவியது தான். அடையாரில் உள்ள அவ்வை இல்லம். ஆயிரகணக்கான ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வு அளித்து உள்ளது. அளித்து கொண்டு இருக்கிறது. தேவதாசி முறையை ஒழித்தவர் முத்து லட்சுமி அம்மையார் தான். தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சியிலும் இவர் மிகப்பெரிய தொண்டு ஆற்றியுள்ளார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,