புலிட்சர் விருது

 ஜூன் 4,

வரலாற்றில் இன்று.

1917 ஆம் ஆண்டு இதே நாளில்தான் புலிட்சர் விருது முதன்முதலாக அளிக்கப்பட்டது. அமெரிக்க வரலாறு என்னும் பிரென்ச் மொழியிலான புத்தகத்தை எழுதிய ஜீன் ஜுலே ஜெஸ்ஸராண்ட் என்பவருக்கு முதலாம் புலிட்சர் விருது 2000 டாலர் வழங்கப்பட்டது

.


புலிட்சர் விருது ஹங்கேரிய அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் என்பவரால் நிறுவப்பட்டது. 1911 ஆம் ஆண்டில் இவர் இறக்கும்போது இதற்காக ஒரு தொகைப் பணத்தைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார். இத் தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது. இது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு - இத்துறைகளைச் சேர்ந்த இருபத்தொரு பிரிவுகளில் ஆண்டுதோறும் இப்பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இளங்கோ 

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,