பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள்

 


பச்சை பட்டாணியின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!🌐⛔



* நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சை பட்டாணி. பச்சைப் பட்டாணியில் பாஸ்பரஸ் நிறைந்து காணப்படுகிறது. இதில் கொலஸ்ட்ரால் இல்லை. புரத சத்தும், நார்சத்தும் நிறைந்து காணப்படுகிறது.



* பட்டாணியில் போலிக் அமிலம் அதிகம் உள்ளது. செல்களுக்கு உள்ளே டி.என்.ஏ. தொகுப்பு இயக்கம் சீராக நடைபெற ஃபோலேட்ஸ் என்கிற பி.காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் அவசியம் தேவை. பட்டாணியில் அவை உள்ளது. பட்டாணி உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.



* கண் நன்றாக தெரிய வைட்டமின் இ மிகவும் அவசியம். உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் பட்டாணியில் உள்ள வைட்டமின்கள் உதவுகிறது.



* பட்டாணி சாபிட்டால் வாய் துர்நாற்றமும் குறையும். பட்டணியில் அடங்கியுள்ள நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற  வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன.



* வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் பட்டாணியில் உள்ள வைட்டமின் டி நன்கு பயன்படுகிறது.



* பச்சை பட்டாணியில் ஆண்டிஅக்சிடண்டுகள் நிரம்பியுள்ளது. இது இதயத்திற்கு தேவையான ரத்தத்தை தடையின்றி சீராக செல்ல உதவும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,