சின்னக்குத்தூசி
இன்று சின்னக்குத்தூசி என்று பரவலாக அறியப்பட்ட இரா. தியாகராஜன் பிறந்த நாள் (ஜூன் 15, 1934 - மே 22, 2011) தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர். இவர் திருவாரூரில் 1934 ல் பிறந்தார். திருவாரூரில் பள்ளிப்படிப்பை முடித்து பின்னர் பெரியார் நடத்திய ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் ஆசிரியராக பயிற்சி எடுத்தார்.
திராவிட இயக்க சிந்தனையாளர், எழுத்தாளர், இதழாளர் சின்னக்குத்தூசி திருமணம் செய்துகொள்ளாமல் கூட தன்னை முழுமையாக இயக்கத்துக்கும் கொள்கைக்கும் ஒப்படைத்துக் கொண்ட கொள்கை வீரர். பிறப்பால் பார்ப்பனர் தான்... ஆனால் அதற்கான எந்த அடையாளமும் குணத்தின் எந்தத் துளியிலும் இருக்காது. உண்மையில் இவர் தான் அக்கிரகாரத்தின் அதிசய மனிதர். பொதுவுடைமை இயக்கத்தவருடன் பணியைத் தொடங்கி, திராவிட இயக்கத்தில் இணைந்து இறுதிவரை கொள்கையில் உறுதியாய் இருந்தவர்.
இரத்த உறவுகள் இன்றி, முற்றிலும் நண்பர்கள், தோழர்கள், கொள்கை என்றே வாழ்ந்துவிட்ட சின்னக்குத்தூசி அவர்கள், தனது மரணத்திற்குப் பின் தன் இறுதி நிகழ்வின் செலவுகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை, தான் தங்கியிருந்த மேன்சன் உரிமையாளரிடம் கொடுத்து வைத்திருக்கிறார். பொதுஉடைமை இயக்கத்தோழர் EMS .நம்பூத்ரி பாட்டை போல சொந்த வாழ்க்கையில் ஒரு காந்தியனாக எளிய வாழ்வு வாழ்ந்திருக்கிறார் திரு.சின்ன குத்தூசி. 2010 முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் உயர்சிகிச்சை பெற்று வந்தார். தன் உடல்நிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து கட்டுரைகள் பல எழுதி வந்தார். தனி மரம் தோப்பாகாது என்பதைப் பொய்ப்பித்தவர் குத்தூசியார்!
Comments