கிரேக்க மன்னன் மகா அலெக்சாண்டர் இறந்த நாள்..
வரலாற்றில் இன்று - ஜூன் 10ம் நாள் கி. மு 324 கிரேக்க மன்னன் மகா அலெக்சாண்டர் இறந்த நாள்.. உலக சரித்திரத்தில் அலெக்ஸாண்டரைப்போல் வேறு ஒரு மாவீரன் கிடையாது என்பதால்தான் அவரை அலெக்ஸாண்டர் தி கிரெட் என்று நினைவில் வைத்திருக்கிறது வரலாறு. அப்படிப்பட்ட மாவீரனுக்கு வீரம் பலத்தை தந்தது விவேகம் புகழை தந்தது வீரமும் விவேகமும் சம அளவில் அலெக்ஸாண்டரிடம் இருந்ததால்தான் அவருக்கு அந்த வானமும் வசப்பட்டது. இந்த நியதி நமக்கும் நிச்சயம் பொருந்தும்.
அலெக்ஸாண்டரைப்போல் இல்லையென்றாலும் நாம் எண்ணுகின்ற இலக்கினை நோக்கி விடாமுயற்சியோடும் கடின உழைப்போடும் போராடினால் நமக்கும் அந்த வானம் வசப்படாமலா போகும்
Comments