கர்நாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயர் நினைவு நாள்

 


இன்று புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் மதுரை மணி ஐயர் நினைவு நாள் ஜூன் 8, 1968  மதுரைக்காரரான இவருடைய இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன், காலப்போக்கில் இது சுருங்கி மணி ஆனது. சிறு வயதிலேயே கருநாடக இசையை முறையாகக் கற்றுக் கொண்டார். மதுரை தியாகராஜ சங்கீத வித்தியாலயத்தில் மாணவராகச் சேர்ந்தார். ஆங்கிலக் கல்வியில் தீவிரமான ஈடுபாடு கொண்டவர் மணி அய்யர். ஆங்கில இலக்கியத்தை விரிவாக வாசித்தவர். தமிழிலக்கியத்தில் தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி போன்றவர்களுடன் நெருக்கமான உறவுள்ளவராக இருந்தார்.

மேடையில் மதுரை மணி அவர்கள் பாடும் பொழுது, ரசிகர்கள் அனைவரும் கண்களை மூடி, தலையை ஆட்டியபடி அமர்ந்து கேட்பார்கள்.  ராக ஆலாபனை, நிரவல்கள், கற்பனை ஸ்வரங்கள் இவருடைய தனிச் சிறப்பு. 

மதுரை மணி அவர்கள், பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், அருணாச்சலக் கவிராயர் பாடல்கள் என்று பல தமிழ்ப் பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடியவர்.

கான கலாதரர், சங்கீத கலாநிதி விருது,  சங்கீத நாடக அகாதமி விருது, 

இசைப்பேரறிஞர் விருது முதலான விருதுகளை பெற்றுள்ளார்\




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,