ஈ.எம்.எஸ்


 அனைவராலும் ‘ஈ.எம்.எஸ்’ என அன்போடு அழைக்கப்பட்ட பிரபல பொதுவுடைமைத் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் (E.M.S.Namboodiripad) பிறந்த தினம் இன்று (ஜூன் 13, 1909). இந்தியாவில் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யூனிச ஆட்சியின் தலைவர் இவரே. இவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, நிலச் சீர்திருத்தங்கள் பெருமளவு மேற்கொள்ளப்பட்டன. 1964-ல் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது மார்க்சிஸ்ட் பிரிவுடன் இணைந்தார். அதன் பொதுச் செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றினார் . மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரள மாநிலம் உருவானதில் முக்கியப் பங்காற்றினார். எளிமையாக வாழ்ந்தவர். ஏறக்குறைய 70 ஆண்டுகாலம் பொது வாழ்வில் ஈடுபட்டவர். ‘ஈ.எம்.எஸ்’ என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நேர்மையான அரசியல்வாதியாகவும், முன்னுதாரணத் தலைவராகவும் விளங்கிய ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் 89-வது வயதில் (1998) மறைந்தார்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,