சே குவேரா பிறந்த நாள்
இன்று சோசலிசப் புரட்சியாளர் சே குவேரா பிறந்த நாள். ஜூன் 14, 1928 “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட ஆர்ஜெண்டீனச் சொல்லாகும்
உலக வரலாற்றில் எத்தனையோ விடுதலை வீரர்கள் தோன்றி இருக்கின்றார்கள். ஆனால் சே குவேரா அவர்களில் இருந்து முற்றிலும் வேறு பட்டவர். ஆம் உலகில் விடுதலை வீரர்கள் அனைவரும்தங்கள் சொந்த நாட்டின் விடுதலைக்காகத்தான் போராடினார்கள் ! ஆனால் சே குவரோ எங்கோ ஒரு தேசத்தில் பிறந்து தனக்கு தொடர்பே இல்லாத இன்னும் ஒரு நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடி.அங்கு விடுதலை கிடைத்ததும்.அங்கு தனக்கு வழங்கப்பட்ட உயர் பதவிகளைத் துறந்து மற்றுமோர் தேசத்திற்காக போராட சென்று.துணிச்சலாக மரணத்தை சந்தித்த மாவீரன். சே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது தனது வாழ்நாள் முழுவதும் அநீதிக்கெதிராகவும் அடிமை மக்களின் விடியலுக்காகவும் போராடியவர் - இன்று உலகத்தின் இளைஞர்கள் அனைவராலும் புரட்சி என்கிற வார்த்தைக்கு ஒரே அடையாளமாக அறியப்படும் தோழர். சே குவேரா.
Comments