உலக இசை நாள்
ஜூன் 21: உலக இசை நாள் இன்று கொண்டாடப்படுகிறது
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு அழகிய கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை மனிதர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில் வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தைஉருவாக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் உலக இசை நாள் கொண்டாடப்படுகிறது.
அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகளை பகிர்வோம்.
Comments