ஏழு சுரங்களில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இன்று பிறந்தநாள் காணும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றிய தொகுப்பு.
சரிகமபதநி என்னும்
ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்,
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,
கண்ணனைப் பற்றி,
கிருஷ்ண கானத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்
இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் அவர்கள்.
இசை பதிவின் போது, கண்ணதாசனும் எம் எஸ் வி. இருந்தால் ஒரே கலகலப்பா இருக்கு மாம். இந்த இருவருக்குமே இன்று பிறந்தநாள்.
கண்ணதாசனைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டது. இன்றைய பகுதியில் மெல்லிசை மன்னர் குறித்தான பதிவுகள்.
1928 ஆம் ஆண்டு கேரளாவில், பாலக்காடு அருகில் உள்ள எலப்பள்ளி என்னும் கிராமத்தில் பிறந்தவர் தான் மனயங்கத்து சுப்பிரமணியன்
விஸ்வநாதன்.
தனது நான்கு வயதிலேயே, தந்தையை இழந்த இவர், தாத்தா கிருஷ்ணன் நாயரிடம் வளர்ந்தார். அவ்வமயம், தாத்தாவின் வீட்டிலேயே கர்நாடக இசையை, நீலகண்ட பாகவதரிடம் முறைப்படி பயின்றார். தனது பதிமூன்றாவது வயதிலேயே மேடைக் கச்சேரியை நடத்தினர்.
சி ஆர் சுப்பராமன், இசைக்குழுவில் இவர் ஆர்மோனியமும். டி கே ராமமூர்த்தி அவர்கள் வயலினும் வாசித்தனர்.
பிறகு இருவரும் சேர்ந்து ஒன்றாக இசையமைத்தனர்.
1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெனோவா படமே இவர்கள் முதன்முதலில் இசையமைத்தது.
புரட்சித்தலைவர், எம்.ஜி.ஆர். நடித்த ஆயிரத்தில் ஒருவன் படம் வரை இவர்கள் இருவருமே ஒன்றாக இசையமைத்தனர். அதன் பின்னர் பிரிய நேரிட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான "நீராரும் கடலுடுத்த" என்னும் பாடலுக்கு மோகன ராகத்தில் இசை அமைத்து தந்தவரே மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. அவர்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில், அந்தக் காலத்தில், ஜி. ராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, ஜீ. தக்ஷிணாமூர்த்தி, கே.வி. மகாதேவன், வேதா, கண்டசாலா, சுதர்சனம், ஆதிநாராயண ராவ், ஏ எம். ராஜா போன்றோர் இசையமைத்த போதிலும், விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்கள், தனித்திறமையினால் தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணமும் அவர்கள்
இசையமைக்கும் பாடல்கள் மக்களுக்குப் பெரிதும் கவர்ந்த வண்ணமாய் அமைந்தன.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் படமென்றால். பாசமலர். படித்தால் மட்டும் போதுமா. ஆலயமணி. கர்ணன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதைப்போல, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், முத்துராமன், எஸ் எஸ் ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என அன்னாளில் உள்ள முன்னாடி நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு இசை அமைத்தனர்.
இசைஞானி என்று சொல்லக்கூடிய இளையராஜா தனதுசிறுவயதில். "மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி"
ரசித்ததாக சொல்வார், அந்தப் பாடல்களுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர்கள்.
எனக்கொரு காதலி இருக்கின்றாள்
அவள் ஏழு சுரங்களில் சிரிக்கின்றாள்
என எம்எஸ்வி பாடும் ஒரு பாடல், அவருக்கு பொருத்தமான பாடல் இது.
மெல்லிசை மன்னர் அவர்கள் வீடு, சென்னை சாந்தோம் சாலையில் உள்ளது.
வேளச்சேரி, அடையாறு சர கங்களில், பொது வினியோக திட்ட களப்பணி மேற்கொள்ளும் பொழுது, அடையாரில் இருந்து, திருவல்லிக்கேணி செல்லும் வழியில், அவரது வீட்டை பார்த்துக் கொண்டே போவது உண்டு. வீட்டின் முகப்பில் "இசை சக்கரவர்த்தி " என எழுதி இருக்கும்.
மெல்லிசை மன்னரின் ஆர்மோமானியமும், அவரது விரல்கள் நுனியும், இசை ஞானமும் எத்தனை எத்தனை பாடல்களுக்கு மெட்டுக்கள்போட வைத்தன.
பின்னணிப் பாடகி களுக்கு
இவரது இசையமைத்த பாடல்கள் தேசிய விருது பெற்றுத் தந்தவர்.
உயர்ந்த மனிதனில், திருமதி பி சுசீலா அவர்கள் பாடிய பால் போலவே வான் மீதிலே, என்ற பாடலுக்கு தேசிய விருதும்.
அபூர்வ ராகங்களில், திருமதி வாணி ஜெயராம் பாடிய ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது மெல்லிசை மன்னர் எம், எஸ்.வி என்னும் மாபெரும் கலைஞன் இசை அமைத்த பாடல்களே.
புதிய பறவை என்னும் படத்தில், " எங்கே நிம்மதி" என்ற பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள், அதாவது 200 க்கு மேற்பட்ட இசைக் கருவிகள் வாசிக்கப்பட்டு பிரம்மாண்டமாக
பதிவு செய்த பாடல்.
தமிழ் படத்தில், முதல் வெளிநாட்டு படமான ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான சிவந்த மண் படத்திற்கு இவர்தான் இசை.
அடுத்து வெளிநாட்டு படமான தமிழில் வெளிவந்த மக்கள் திலகத்தின் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் இவர் தான் இசை.
தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட இசை அமைப்பாளரில் இவரும் ஒருவர்
M S. V என்பது
M for Music
S for Satisfaction
V for Variety இப்படியும் அர்த்தம் கொள்ளலாமா.....
முருக. சண்முகம்
Comments