கனிஷ்கா இந்திய விமானம் தகர்ப்பு

 




வரலாற்றில் இன்று -  1985 ஜூன் 23ம் நாள் கனிஷ்கா என்ற பெயருடைய ஏர் இந்திய விமானம் பிளைட் 182 கனடாவின் டுரான்டோ   - லண்டன் - புது டெல்லி  மார்க்கத்தில் விண்ணில் 9400 மீட்டர் உயரத்தில்  பறந்து வந்துகொண்டிருந்தபோது அயர்லாந்து வான்வெளியில்  வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்து மூழ்கிய விமானத்தின் 329 பயணிகளும் இறந்தனர். இது கனடா மற்றும் இந்திய வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத த் தாக்குதலாகும். இவ்வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது கனடாவை தளமாகக் கொண்டு இயங்கிய பாபர் கல்சா என அழைக்கப்பட்ட காலிஸ்தான் தீவிரவாத அமைப்பாகும்   பலியான பயணிகளில் பெரும்பாலானோர் கனடா நாட்டவர். உலகை உலுக்கிய இப்பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் காலிஸ்தான் ஆதரவு இயக்கங்களுக்கு எதிரான நடவைக்கைகளை உலக நாடுகள் அனைத்தும் முடுக்கிவிட்டன. காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அதுவரை ஆதரவளித்து வந்த பாகிஸ்தானும் மேலை நாடுகளின் நெருக்கடி காரணமாக  அதனை நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையும் முடிவுக்கு வந்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,