திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள்
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் (1924 ) அவருடைய மறைவுக்குப் பின்னர் வருகின்ற நான்காவது பிறந்த நாள். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு முக்கிய பங்கு வகித்த மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ‘60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து, ஒரு வலிமையான சக்தியாக இருந்து தனது கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் திறம்பட. வழிநடத்தியவர் சமூகப் பணியில் அவருக்கு இருந்த பேரார்வமே ஒரு சிறந்த முதலமைச்சராக அவரை செயல்பட வைத்தது கருணாநிதி அவர்கள், அன்போடு மக்களால் “கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் தனக்கென ஒரு இடத்தைத் தக்கவைத்து, அசைக்க முடியாத ஒரு சக்தியாக விளங்கினார். தமிழ் இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பைத் தவிர சமூகத்திலுள்ள ஏழை எளியவர்களின் நலனுக்காகவும் தன்னை அற்பணித்துக்கொண்டார். தனது அரசியல் வாழ்க்கையில் கருணாநிதி அவர்கள், சமூக பொருளாதார நிலைமைகளின் வளர்ச்சிக்காகவும், சீர்திருத்தத்திற்காகவும் போராடினார். அவருடைய ஆட்சியின் போது, கொண்டு வரப்பட்ட ‘தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம்’, தமிழக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரமாக இருந்தது. மாநில பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, தொழில்துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழக அரசியல் லகானை தன் கையில் வைத்துக்கொள்ளும் வித்தை கற்றவர் கருணாநிதி. அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால் தினமும், 'இன்று கருணாநிதி என்ன கேள்வி எழுப்பியிருக்கிறார்', 'எதற்கு என்ன விளக்கம் அளிப்பது' என்றுதான் ஆட்சித் தலைமை நினைக்கும். அப்படி அனைத்து விஷயங்களிலும் ஆராய்ந்து அரசின் குற்றம் குறைகளை அறிக்கையாகவோ கேள்வி பதில்களாகவோ வெளியிட்டு வந்தவர்.
இளங்கோ
Comments