முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தின் பொருள்

 முருகப்பெருமானின் சரவணபவ மந்திரத்தின் பொருள்...!  சிவனாரிடமிருந்து முருகன் தோன்றியதால் ‘சிவமும் முருகனும்’ ஒன்றே என்பது தத்துவம். சைவ சித்தாந்தம் முருக வழிபாட்டை சைவத்தின் ஒரு கூறாவே கருதப்படுகிறது.


முருகப்பெருமான் இச்சா சக்தியான வள்ளியையும், கிரியா சக்தியான தெய்வானையையும் மணந்த ஞான சக்தியாக தென்னாட்டிலும், பிரம்மச்சாரியான கார்த்திகேயராக வடநாட்டிலும் வழிபடப்படுகிறார்.


 சரவணப்பொய்கையில் உதித்த சண்முகக் கடவுளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால், கார்த்திகை நட்சத்திரம், ஆடி மாதத்தில் வரும்  கிருத்திகை நட்சத்திரம், ஆடிக் கிருத்திகை என்றே சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.


அன்று துவங்கி, கிருத்திகை நட்சத்திரம் தோறும்  விரதமிருந்து, தைக்கிருத்திகை அன்று விரதம் முடிப்பவர்களுக்கு எம்பெருமான் முருகனருளால் தீராப் பெருந்துயர் தீரும்.


 திருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று  பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.


 ச - செல்வம்

ர - கல்வி

வ - முக்தி

ண - பகை வெல்லல்

ப - காலம் கடந்த நிலை

வ - ஆரோக்கியம்

 

 முருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.

 

🌹 🌿 சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெறவேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில்  தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர  வேண்டும் என வரம் பெற்றான்
.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,