இராமச்சந்திர காந்தி

 இராமச்சந்திர காந்தி பிறந்த தினம் இன்று.

இராமச்சந்திர காந்தி ஒரு மெய்யியல் அறிஞர் ஆவார்.

இவருடைய தந்தையார் தேவதாஸ் காந்தி (மகாத்மா காந்தியின் மகன்). தாயார் இலட்சுமி (இராஜாஜியின் மகள்)

இராஜமோகன் காந்தி, கோபால்கிருஷ்ண காந்தி, தாரா காந்தி பட்டாச்சார்ஜி ஆகியோர் இராமச்சந்திர காந்தியின் உடன் பிறந்தவர்கள். இவரது மகள் லீலா காந்தி ஆவார்.

இராமச்சந்திர காந்தி ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். விசுவ பாரதி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக் கழகம், பெங்களூரு பல்கலைக் கழகம், கலிபோர்னியா ஒன்றிணைந்த கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றினார். ஐதராபாத் பல்கலைக் கழகத்தில் இவருடைய முயற்சியால் தத்துவத்துறை ஏற்படுத்தப்பட்டது.

காந்தி அடிகளையும் இரமண மகரிசியையும் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் ஆராய்ந்து ஒரு நூல் எழுதினார். பாபர் மசூதி இடிக்க வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் முயன்றபோதும் பரப்புரை செய்தபோதும் தம் இந்து மத ஆராய்ச்சி அறிவு கொண்டு அதற்கு எதிராக கருத்துகளை எழுதினார். அது போலவே 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடைபெற்ற இன கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்தார்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,