ராஜா சர் அண்ணாமலை செட்டியார்

 


இன்று ஜூன் 15, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுநாள் (1948) சமூக நோக்கும் மனித நேயப் பண்பாடும் வளர்ந்தோங்கிய நகரத்தார் சமுதாயத்திலே பெருஞ்செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்த .ராம.முத்தையாச் செட்டியாரின் நான்காவது புதல்வரே அண்ணாமலைச் செட்டியார். தெய்வபக்தி, அறச்சிந்தனை, தொழில் அர்ப்பணிப்பு ஆகியன மேலோங்கிய குடும்பத்தில் பிறந்ததினால் “கருவில் அமைந்த திருவே” இவரின் பிற்காலத்திய சாதனைகள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது 

1929 இல் இங்கிலாந்து மன்னர் “ராஜா” என்ற பட்டத்தினை அண்ணாமலைச் செட்டியாருக்கு வழங்கிச் சிறப்பித்தார். அன்று முதல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் என்றபெயர் நீடித்து நிலைத்தது.

பல்வேறு கல்வித்தொண்டு ஆற்றிய இவரால் நிறுவப்பட்டதே சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகம். இசைப்பற்று மிக்க செட்டியார் சென்னையில் தமிழிசைச்சங்கம் உருவாக்கினார். இன்றும் அவரது நினைவை பறை சாற்றிக் கொண்டிருப்பது சென்னை பாரிமுனை அருகில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,