நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கிய முள்ளங்கித் துவையல்.:

 நீர்ச் சுருக்கு, நீர்க்கடுப்பு, உடல் உஷ்ண வியாதிகள் மற்றும் மூட்டு வீக்கத்தை போக்கும் ஆரோக்கிய முள்ளங்கித் துவையல்.:

 


தேவையான பொருட்கள்.:

முள்ளங்கி - கால் கிலோ

புளி - 25 கிராம்

மிளகு - 10 கிராம்

உளுந்தம் பருப்பு - 10 கிராம்

உப்பு, பெருங்காயம், எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை.: 

முதலில் முள்ளங்கியை சுத்தம் செய்து சிறிதாக அரிந்து நீராவியில் வேக வைக்கவும். 


ஒரு பாத்திரத்தில் பெருங்காயம் , மிளகு , உளுந்தம்பருப்பு ஆகியவற்றை போட்டு சிறிது எண்ணெய் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். 


வேக வைத்த முள்ளங்கியுடன் புளி மற்றும் வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பின்னர் சிறிது எண்ணெய் சேர்த்து தாளித்து கொள்ளவும். 


முள்ளங்கி துவையல் தயார்.


பயன்கள்.: 

இந்த துவையலை நீர்கடுப்பு, நீர்ச் சுருக்கு இருக்கும் பொழுது உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை தீரும். 


உடல் சூட்டினால் உண்டாகும் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. 


மூட்டு வீக்கம் உள்ளவர்கள் தினமும் உணவில் இந்தத் துவையலை அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வீக்கம் மறையும்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்