ஒத்துழையாமை இயக்கம்
வரலாற்றில் இன்று -ஜூன் 7,1920 ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது பிரிட்டிஷ் இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் துவக்கப்பட்ட நாள் 1920ம் ஆண்டு ஜூன் 7ம் நாள். இந்தியர்கள் பிரிட்டிஷ் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்துக்கு கிடைத்த வெற்றி காரணமாக மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார்.
Comments