ஆபரேஷன் புளூ ஸ்டார்

 


வரலாற்றில் இன்று – (1981 – June 3) ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திய ராணுவம் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித கோயிலான பொற்கோயிலினுள் நுழைந்த நாள் பஞ்சாபில் 'காலிஸ்தான்" தனி நாடு பிரிவினை கோரி சீக்கிய தீவிரவாதிகள் போராடினர். அவர்களின் தலைவரான பிந்தரன்வாலே வன்முறை அரசியலில் ஈடுபட்டு வந்தார். பஞ்சாபில் இந்த காலிஸ்தான் போராளிகள் பல பயங்கரவாதத் தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். அவர்களை விரட்டிய இந்திய ராணுவ மற்றும் காவல் துறையினரின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க காலிஸ்தான் போராளிகள் சீக்கியர்களின் புனித பொற்கோயிலினுள் ஒளிந்து கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் பொற்கோயிலினுள் திடீரென நுழைந்து ராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டார். இந்த ராணுவ நடவடிக்கையில் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். பல வன்முறையாளர்களும் கொல்லப்பட்டனர். அதனைத்தொடர்ந்து காலிஸ்தான் இயக்கம் வலுவிழந்து போயிற்று. எனினும் இந்த நடவடிக்கையே பின்னர் ஒரு சீக்கிய மெய்க்காவலரால் இந்திராகாந்தி படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்ததுComments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்