இன்று வீரன் வாஞ்சிநாதன் நினைவுநாள்:

 இன்று வீரன் வாஞ்சிநாதன் நினைவுநாள்:




நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த வீரவாஞ்சிநாதன் ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்ற தினமான ஜூன் 17ம் நாள் வீரவணக்க நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களை அன்றைய ஆங்கிலேய அரசு அடக்கு முறையால் ஒடுக்கியும், அடக்கியும் வந்தது. இதை எதிர்த்து ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்ட திட்டமிட்ட வீரர்களில் வீரவாஞ்சிநாதனும் ஒருவர். இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும் சிறையில்.அடைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் அப்போதைய நெல்லை கலெக்டர் ஆஷ்துரை துப்பாக்கிக்சூடு நடத்த உத்தரவிட்டார். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனால் வெகுண்ட வாஞ்சிநாதனும், சாவடி அருணச்சல பிள்ளையும் சேர்ந்து ஆஷ் துரையை சுட்டுக் கொல்ல திட்டமிட்டனர். அதன்படி 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்ட கலெக்டர் ஆஷ்துரையையும், அவரது மனைவியையும் மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து வீரவாஞ்சி சுட்டுக் கொன்றார். பின்னர் அதேதுப்பாக்கியால் தன்னையும் சுட்டுக்கொண்டு களமரணம் அடைந்தார். வீரவாஞ்சிநாதன் மரணம் அடைந்த ஜூன் 17ம் தேதியில் ஆண்டுதோறும் செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு  வீரவணக்கம் செலுத்தும் விழா நடத்தப்பட்டு வருகிறது.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,