வைகாசி விசாகம் - விரத சிறப்புகள், பூஜைக்கான நேரம்...

 வைகாசி விசாகம் - விரத சிறப்புகள், பூஜைக்கான நேரம்...

 தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாக நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.வைகாசி மாதமும், விசாக நட்சத்திரமும் கூடிய தினத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும்.மகாபாரதத்தில் வில் வித்தகனாக திகழ்ந்த அர்ஜுனன், அவரின் பாசுபத ஆயுதத்தைச் சிவபெருமானிடமிருந்து வரமாக பெற்ற நாள்.


🌹 🌿 ஹைலைட்ஸ்:


தமிழ் கடவுள் முருகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாக நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.


வைகாசி மாதமும், விசாக நட்சத்திரமும் கூடிய தினத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.


 மகாபாரதத்தில் அர்ஜுனன்,பாசுபத ஆயுதத்தைச் சிவபெருமானிடமிருந்து வரமாக பெற்ற நாள்.


🌹 🌿 அழகும், ஞானமே உருவானவர் முருகப் பெருமான். அவர் அவதரித்த நாளை வைகாசி விசாக நட்சத்திரத்தில் ஜூன் 12ம் தேதி, (வைகாசி 29) அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

வைகாசி மாதமும், விசாக நட்சத்திரமும் கூடிய தினத்தில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதத்தில் வரும்.


🌹 🌿 வைகாசி விசாகம் 2022 தேதி மற்றும் பூஜைக்கான நேரம்

வைகாசி விசாக தேதி : 12 ஜூன் 2022, ஞாயிறு கிழமை

வைகாசி நட்சத்திரம் தொடங்கும் நேரம் - ஜூன் 11, இரவு 11.26 மணி முதல்வைகாசி நட்சத்திர முடியும் நேரம் : ஜூன் 26, இரவு 10.16 மணி வரை


🌹 🌿 வைகாசி விசாகம் சிறப்புகள்

வைகாசி விசாக திருநாளில் திருச்செந்தூர் சுப்ரமண்ய கோயில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி செய்து, இறைவனின் உஷ்ண சாந்தி உற்சவம் நடத்துவது வழக்கம்.


🌹 🌿 அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் இறைவனுக்கு நீர் மோர், பாயசம், அப்பம் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.அதுமட்டுமில்லாமல் திருச்செந்தூர் கோவில் வசந்த மண்டபத்தில் இருக்கும் நீர் தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளை அதில் இடுகின்றனர். அவை முருகப்பெருமானின் வாயிலிருந்து சிந்திய பாலினை குடித்து சாப விமோசனம் பெற்றதாகவும், அவர்கள் பாரச முனி குமாரர்களை நினைவு படுத்தும் விதமாக ஆறு முனிவர்களின் உருவ பொம்மை வைத்து, அவர்களுக்கு முருகனின் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியும் ஆண்டும் தோறும் நடத்தப்படுகிறது


🌹 🌿 பாசுபத ஆயுத வரம் :

மகாபாரதத்தில் வில் வித்தகனாக திகழ்ந்த அர்ஜுனன், அவரின் பாசுபத ஆயுதத்தைச் சிவபெருமானிடமிருந்து வரமாக பெற்ற நாள்.பன்னிரு ஆழ்வார்களில் நம்மாழ்வார் பிறந்த தினம் இந்த நாளில் அமைந்துள்ளது.


🌹 🌿 திருமழப்பாடி என்ற ஊரில் ஈசன் மழு என்ற ஆயுதத்தை ஏந்தி திருநடனம் ஆடிய அற்புத நாள்.ராமலிங்க அடிகளார் தன் சத்ய ஞான சபையை வடலூரில் நிறுவிய நாள்.


🌹 🌿 வைகாசி விசாக தினத்தில் பெரும்பாலான கோவில்களில் மகா உற்சவம் நடத்தப்படுகிறது.

வைகாசி விசாக தினத்தில் பிறந்தவர்கள் முருகப் பெருமானைப் போல அறிவுக்கூர்மையுடன், பல புகழ்களை அடையக்கூடியவர்களாக இருப்பார்கள்.


🌹🌿பல சிறப்புகள் வாய்ந்த இந்த அற்புத வைகாசி விசாக தினத்தில், நாமும் விரதமிருந்து முருகப்பெருமானைப் பூஜித்து வழிபட்டால், ஞானமும், செல்வமும் பெற்று சிறப்பாக வாழலாம்.

வால்மீகி ராமாயணத்தில் ராம - லட்சுமணனுக்கு முருகப்பெருமானின் பிறப்பு, சிறப்பு குறித்து விளக்கி கூறியுள்ளார்.


 நன்றி




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி