இந்திய ஓவியர் ஹுசைன் நினைவு நாள் -

 இன்று உலக புகழ்பெற்ற இந்திய ஓவியர் ஹுசைன் நினைவு நாள் - ஜூன்   9, 2011 பரவலாக எம்.எஃப்.உசைன் (M F Husain)என அறியப்படும் இவர் தனது ஏழுபதாண்டு பணிவாழ்வில் ஏராளமான ஓவியங்களைத் தீட்டியுள்ளார். உயர்வாக மதிக்கப்படும் இவரது படைப்புகள் உலகின் கலை ஆர்வலர்களால் மிக அதிக விலையில் வாங்கப்படுகின்றன.


இந்தியாவின் பிக்காஸோ" என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை பெற்றிருந்தாலும், இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பாக இவரை நாட்டிலிருந்து விரட்டிவிட்டது. அவருடைய படைப்புகள் மதரீதியாகப் புண்படுத்துகின்றன என்று அவருக்கு எதிராக இந்து மத தீவிரவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். அவருடைய ஓவியக் கண்காட்சிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அவர் இங்கிலாந்தில் (1996-ல்) குடியேறிவிட்டார். அதன் பின்னர் தனது மரணம் வரை அவர் துபையில் பல ஆண்டுகள் வசித்தார்.

இந்தியாவின் பிக்காஸோ” என்று அழைக்கப்பட்ட எம்.எப்.ஹுசைன் தலைசிறந்த இந்திய நவீன ஓவியர் என்ற புகழை உலகெங்கிலும் ஈட்டியிருந்தாலும், அவர் இந்தியாவில் தனது மரணத்தை எதிர்கொள்ளவோ, இந்திய மண்ணில் புதைக்கப்படவோ சாத்தியமாகவில்லை என்பது தேசிய அவமானம்..



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,