நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
ஜூன் 24: தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆன கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் இன்று...
தன் அனுபவப் பாடங்களை பாடல்கள் மூலம் ஒரு தலைமுறைக்கே தாய்ப்பாலாய் புகட்டியவர் கவியரசு. கலங்காதிரு மனமே.. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே!' என தன் முதல் பாடலிலேயே நம்பிக்கையோடு கலைப்பயணத்தைத் துவக்கியவர்.
இன்று அவரது பிறந்தநாள். நம் வாழ்வின் முக்கியத் தருணங்கள் அனைத்திற்கும் கண்ணதாசனின் ஏதேனும் ஒரு பாடல் பொருந்துவதாக இருக்கும். பாட்டுடைத் தலைவன் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய வாழ்க்கையை பற்றி அவரே எழுதிய கவிதை இதோ,
"ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழ்கின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்- நான்
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமர ஜாதியில் தனி மனிதன்- நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்
மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைபாடலிலே என் உயிர் துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு… "
-கவியரசர்.
Comments