விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக சத்யராஜ்

 இன்று ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் முதல் அத்தியாயமான 1986 ல் வெளிவந்த விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பார். காலப்போக்கில் வில்லன் கதாபாத்திரமே வேண்டாம் என்ற மன நிலையில் இருந்த சத்யராஜை அமைதிப்படை படத்திற்காக நடிகரும் இயக்குனருமான மணிவண்ணன் சந்திக்க போயிருந்தார்.


அப்போது சும்மா பேருக்கு கதையை கேட்டு பின் பாத்துக்கலாம் என சொல்லிவிடலாம் என நினைத்துக் கொண்டு இருந்தாராம்.கூட சத்யராஜின் மகனும் நடிகருமான சிபிராஜும் இருந்தாராம். அப்போது சிபி 5 ஆம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தாராம். கதையை முழுவதுமாக கேட்டு கொண்டிருந்தாராம் சத்யராஜ்.
வேண்டாம் வெறுப்பாக இருந்த சத்யராஜை அவரின் மகன் சிபிதான் “ அப்பா கதை ரொம்ப நன்றாக இருக்கு. நீங்கள் இந்த படத்தில் நடிங்கள் அப்பா” என்று கூறினாராம். இவர் சொன்னதுக்கு அப்புறம் தான் சத்யராஜ் ஒப்புக் கொண்டாராம். ஆனால் இது சத்யராஜிற்கு நியாபகம் இருக்கானு தெரியல. ஆனால் என்னால் முடிஞ்சதை பண்ணியிருக்கோம்னு ஒரு பெருமை இருக்கு என்று கூறினார் சிபி. ஆனால் அந்த படத்தை மட்டும் மிஸ் பண்ணியிருந்தால் சத்யராஜ் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை வந்திருக்காது. அந்த அளவுக்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
நன்றி: சினிரிப்போர்ட்டர்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,