கவிஞர்.நயினாரின் இலக்கிய மற்றும் அவரின் மகளின் திருமண.விழா

  ஜூன் மாதம் ஆறாம் தேதி (6/6/2022 ) சென்னை மேற்கு தாம்பரம் T.G.P கல்யாண மண்டபத்தில் கவிஞர்.நயினாரின் ஓய் மற்றும் புளியேப்பம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.அதை தொடர்ந்து அவரின் மகளின் திருமணமும் நிகழ்ந்தது.


இலக்கிய விழாவா இணையேற்பு விழாவா என்று கேட்கும் வகையில் பல கவிஞர்கள் கலந்து கொண்டனர்

கலந்து கொண்ட கவிஞர்களில் சிலர்

பதிப்பகத்தார் கோ.ஒளிவண்ணன்

கவிஞர் வீரமணி

கவிஞர் பூங்கோதை கனகராஜ்

கவிஞர் கா.வெங்கடேசன்

கவிஞர் சுரேஷ்பாபு ராஜேந்திரன்

கவிஞர் கார்த்திக் கல்யாணி

கவிஞர் சுஜாதா கண்ணன்

கவிஞர் செந்தில்குமார்

கவிஞர் குமரன்

கவிஞர் அர்ஷா சிதம்பரம்

இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களும் முகநூல் நட்புகளும் சங்கமித்தது மிக சிறப்பு

 

 


 

சிறப்பு விருந்தினராக எழுத்தாளர்,கவிஞர்,பத்திரிகையாளர் ஆரூர் தமிழ்நாடன்,எழுத்தாளர் கவிஞர் அமிர்தம் சூர்யா,மறைமலையடிகளார் கொள்ளுப்பெயர்த்தி எழுத்தாளர் கலைச்செல்வி புலியூர் கேசிகன்,எழுத்தாளர்,கவிஞர்,படைப்பு குழும நிர்வாகி முகமது அலி ஜின்னா,கவிஞர் முகமது பாட்சா,திரைப்பட இயக்குனர் N.J சரவணன்,கலந்து கொண்டனர்.

 

‘ஓய்’ புத்தகத்தை அமிர்தம் சூர்யா,முகமது அலி ஜின்னா,முகமது பாட்சா ஆகிய மூவர் வெளியிட கவிஞரின் உறவுகள் அப்துல்காதர்,கான் பகதூர்,உமர் அலி ஆகிய மூவர் பெற்றுக்கொண்டனர்.

 


‘புளியேப்பம்’ புத்தகத்தை  ஐயா ஆரூர் தமிழ்நாடன்,கலையரசி,இயக்குனர் சரவணன் வெளியிட..முகமது ஷரிப்,காவல் கண்காணிப்பாளர் சின்னத்தம்பி,குலாம் தஸ்தகீர் பெற்றுக்கொண்டனர்

சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


 

அதை தொடர்ந்து நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தினர்.

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,