உலக சுற்றுச்சூழல் நாள்

 இன்று ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் நாள்



இன்று நீர், நிலம், காற்று என எல்லாமும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. இயற்கை வளங்கள் அவற்றின் தாங்கும் திறனுக்கும் மேலாக சுரண்டப்பட்டுள்ளன. இந்த நிலை இனிமேலும் தொடர்ந்தால் -பூமியில் மனித வாழ்க்கை சாத்தியமில்லாமல் போய்விடும் என்று ஐநா அறிக்கை எச்சரிக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அரசுக்கும் குடி மக்களுக்கும் கூட்டுப் பொறுப்புண்டு. நுகர்வுக் கலாச்சாரத்தை மட்டுப்படுத்துதல், தண்ணீர் சிக்கனம், மழைநீர் சேமிப்பு, நீர்வளப் பாதுகாப்பு, மின்சாரம் உட்பட அனைத்து எரிபொருட்களையும் சிக்கனமாகப் பயன்படுத்துதல் உணவுப்பொருட்கள் வீணாவதைத் தடுத்தல், ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் பங்களிக்க வேண்டும். மற்றொரு புறம் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை கைவிடுதல், சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை முழு அளவில் செயல்படுத்தியும் நீர்நிலைகள், கால்வாய்களின் ஆக்கிரமிப்பை தடுத்தும் அனைத்து மக்களுக்கும் போதுமான சத்துள்ள உணவு கிடைக்கச் செய்வதிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும். "மக்களை இயற்கையுடன் இணையுங்கள்" என்பதே இவ்வாண்டுக்கான சூழியல் நாள் முழக்கம் !



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,