கே.ஏ அப்பாஸ் பிறந்த நாள்

 


இன்று பன்முக சாதனையாளர் கே.ஏ அப்பாஸ் பிறந்த நாள் இன்றைய ஹரியானா மாநிலத்தின் பானிப்பட்டில், 1914-ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் நாள் பிறந்த அப்பாஸ், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், வசனகர்த்தா எனப் பல பாத்திரங்களை வகித்தும் புகழேணியின் உச்சிக்குச் சென்றவர். இலக்கியம் , பத்திரிகைத் துறை , சினிமா ...... எனப் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவர் ; உருது, இந்தி  , ஆங்கில மொழிகளில் அவர் எழுதினார்.

சினிமாத் துறையில் இயக்குநராகவும் கதை வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி பல விருதுகளைப் பெற்றவர் இவர் .

நயா சன்சார் , ஆவாரா , மேரே நாம் ஜோக்கர் , பொபி , ஸ்ரீ 420 போன்ற திரைப்படங்கள் அப்பாஸின் திரைக் கதைகளே .

ஏழு இந்தியர்கள் ( சாத் இந்துஸ்தானி ) , இரு துளி நீர் ( ( தோ பூந்த் பானி ) ஆகிய நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டு ' தேசிய ஒருமைப்பாட்டு விருது ' பெற்றன. ஷெஹர் அவுர் ஷப்னா என்ற படம் ஜனாதிபதி விருது பெற்றது . வேறுபல உண்ணாட்டு , வெளிநாட்டு விருதுகளும் அவருக்குக் கிடைத்தன.

அப்பாஸ் தனது நாவல்கள் , சிறுகதைகள் , நாடகங்கள் , பயணக்கட்டுரைகள் முதலியவற்றைப் பெரும்பாலும் உருது மொழியில் எழுதினார் . இந்திய மொழிகள் பலவற்றிலும் ஆங்கிலம் , ஜெர்மனி , பிரெஞ்சு , ரஷ்யா போன்ற உலக மொழிகளிலும் அப்பாஸின் நூல்கள் பெயர்க்கப்பட்டுள்ளன .Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி