கிரிஷ் கர்னாட். நினைவு நாள்

 ஜூன் 10, 




 இன்று ஞானபீட விருது பெற்ற பிரபல முற்போக்கு எழுத்தாளரும் பழம்பெரும் நடிகருமான கிரிஷ் கர்னாட். நினைவு நாள். . 1938 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார். அங்குதான் அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது. உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார். ஒரு நடிகராக, இயக்குனராக மற்றும் திரைக்கதை எழுத்தாளராக இந்தியத் திரைப்பட உலகில் இன்றும் அவர் நிலைத்து நிற்கிறார். நவீன இந்திய நாடக இலக்கியத்துக்கு புதிய இலக்கணங்கள் எழுதியவர். வரலாற்று கதாபாத்திரங்களை நிகழ்கால சூழ்நிலையோடு ஒப்பிட்டு அவர் எழுதிய துக்ளக், திப்பு சுல்தானின் கனவுகள், தண்டா கதை, மற்றும் ராக்க்ஷஸ தாங்கடி போன்ற நாடகங்கள் மூலம் கர்னாடின் சமூக ஒற்றுமைக்கான அர்பணிப்பை நாம் அறியலாம். ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இந்திய அரசாங்கத்தின் மூலமாக பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழில் காதலன், ரட்சகன், செல்லமே, ஹேராம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்தவராவார். எழுத்தாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை தொடர்ந்து இந்தியாவில் எழுத்தாளர்களின் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர் கிரிஷ் கர்னாட்.'நானும் அர்பன் நக்ஸல்தான்,' என்ற கார்டு மாட்டிக்கொண்டு பொதுவெளியில் காட்சியளித்தவர்.அவர் கர்நாடகாவில் மட்டுமல்லாமல் இந்திய முழுமைக்கும்கூட 'மனசாட்சியின் பாதுகாவலர்' என்று சொல்லத்தக்க முறையில் செயல்பட்டார்.\




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி