லட்சியத்துக்காகவும் பதவியை இழந்த , மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்

 




ராஜவம்சத்தில் பிறந்தவராக இருந்தாலும் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சமூக நீதியை நிலை நாட்டவும் பாடுபட்ட - கொள்கைக்காகவும் லட்சியத்துக்காகவும் பதவியை இழந்த , மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள் இன்று -ஜூன் 25,1931.இந்திய அரசியலில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியவர். இந்தியாவின் 10வது பிரதமராக அவர் பதவி வகித்தார். ஒரு வருட காலம் அவரது தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்தியாவின் முதல் கூட்டணி ஆட்சியைக் கொடுத்த பெருமைக்குரியவர் வி.பி.சிங்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டைப் பரி்ந்துரைத்த மண்டல் கமிஷனின் அறிக்கையை அமல்படுத்துவதில் முழு உறுதியுடன் இருந்து சாதித்துக் காட்டியவர். இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வி.பி.சிங் நிரந்தரமாக இடம் பிடித்தார். சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் நல்ல கவிஞராகவும், ஓவியராகவும் திகழ்ந்தவர். 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி