உலகப் பெருங்கடல் தினம்

 பூமியில் உள்ள மொத்த நீரில் 97 சதவீதம் கடல் நீர் தான். பல வழிகளிலும் உலக மக்களுக்கு நன்மை அளிக்கும் கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களை பாதுகாக்க ஜூன் 8ம் தேதி, உலக பெருங்கடல் நாள்  கடைபிடிக்கப்படுகிறது. 



கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது. மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது.


நேரடியாகக் கடலில் பிளாஸ்டிக் குப்பை போடப்படுவது மட்டுமில்லாமல், கழிவு நீர் பாதைகள் மூலமாகவும், பெருமளவு கழிவு கடலில் கலக்கிறது. இதுபோன்ற கழிவுகள் கடலில் சேரும்போது அது கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து சிறிய துணுக்குகளாகிவிடுகிறது. நுண் உயிரினங்களும், சிதையாத பிளாஸ்டிக் பைகளை ஆமை போன்ற உயிரினங்களும் உண்டு இறந்துவிடுவது மட்டுமல்லாமல் கடல் உணவு வழியாக மனித உடல்களுக்குள் பிளாஸ்டிக் புகுந்துவிடுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெருங்கடல்களைக் காப்பாற்றுவதற்காக, நாம் அனைவரும் உலகப் பெருங்கடல் தினம் அன்று கரம் கோா்ப்போம்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி