இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை துவக்கியவரான தாதாபாய் நௌரோஜி நினைவுநாள்
இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை துவக்கியவரான தாதாபாய் நௌரோஜி நினைவுநாள். (1917 ஜூன் 30). பார்ஸி இனத்தவரான இவர் இங்கிலாந்து பாராளுமன்ற (உறுப்பினராக பதவி வகித்த முதலாம் இந்தியர்..தாதாபாய் நௌரோஜி, 1885-ல் ஆலன் ஆக்டவியன் ஹியூம் மற்றும் உமேஷ் சந்திர பானர்ஜியுடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.
இவரது “பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்” (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரிட்டிஷ் ஆங்கிலேய அரசின் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியதுஇந்தியாவின் பொருளாதார வள ஆதாரங்கள் சுரண்டப்படுகின்றன என்று முதன் முதலில் பட்டியலிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்
தாதாபாய் நௌரோஜி 1917- ஆம் ஆண்டு ஜூன் 30- ஆம் நாள் தனது 92-ஆவது வயதில் மும்பையில் இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
Comments