வ.வே.சு.ஐயர் நினைவு தினம்
இன்று இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் நினைவு தினம் ஜூன் 4, 1925
இந்தியர்கள் மீது பிரிட்டிஷார் திணித்தஇராஜ விசுவாச வாழ்த்துப் பாட மறுத்து, பாரிஸ்டர் பட்டத்தை துறந்தார். இலண்டன், பாரீஸ், பெர்லினில் இயங்கிய இந்திய தேசிய புரட்சி வீரர்கள் குழுவில் இணைந்தார். 1909ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி, புதுச்சேரியில் இருந்து வெளிவந்த பாரதியாரின் “இந்தியா” இதழில், ஜுஸப் கரிபால்டி சரித்திரம் என்ற கட்டுரைத் தொடரை எழுதினார் வ.வே.சு.ஐயர். மகாத்மா காந்தியினால் ஈர்க்கப்பட்டுகாந்தியத்தைத் தழுவி, காங்கிரஸ் இயக்கத்தில் பங்கேற்றார்.
1922ல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தை தொடங்கினார். அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924ல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார். தமிழ் குருகுலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான முறையில் நன்னெறிகளும், அறிவியலும், கலை இலக்கியங்களும், உடல்வலிவுப் பயிற்சிகளும் போதிக்கப்பட்டன.
தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். சிறுபெண்ணான சுபத்திரை அவ்வருவியை எந்த உதவியும் இன்றி தாண்ட விரும்பினார். சிறு பெண்ணான சுபத்திரை அம்முயற்சியில் தவறி அருவியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற குதித்த வவேசுவும் அவ்வருவியிலேயே அமரத்துவம் எய்தினர். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவி நீரில் மூழ்கி அணைந்தது.
Comments