திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் நினைவு நாள்.
உலக இன்னிசை நாளான இன்று திரை இசைத் திலகம் கே. வி. மகாதேவன் நினைவு நாள். இவர் 600க்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்துள்ளார். எண்ணற்ற தேசிய மற்றும் மாநில விருதுகள் பெற்றுள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். முதல்முறையாக தமிழ்த் திரை இசைப்பாடல்களில் கர்நாடக சங்கீத இசை இராகங்களின் மூலம் பாடல்களைப் படைத்து, அன்றைய இளம் இரசிகர்களை தன் இன்னிசை மூலம் ஐம்பது ஆண்டுகாலம் தமிழ்த் திரை உலகை, பாரம்பரியம் விலகாத தன்னுடைய புதுமையான இன்னிசையால் நல்லாட்சி செய்தவர் திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி அவர்களுக்கு காலத்தால் அழியாதப் பாடல்கள் பல தந்த இசை மேதை, K.V.மகாதேவன்
தேசிய அளவில் சிறந்த இசை அமைப்பாளருக்கான முதல் விருதை 1967ல் "கந்தன் கருணை" படத்திற்காக பெற்றவர். பிறகு காலத்தால் அழியாத கர்நாடக சங்கீத இசைக் காவியம் "சங்கராபரணம்" திரை இசைக்காக, 1979ல் மறுமுறை பெற்றவர் K.V.மகாதேவன் அவர்கள். 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்
Comments