வாண்டு மாமா
இன்று வாண்டு மாமா என்றழைக்கப்பட்ட எழுத்தாளர் வி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள் (ஜூன் 12, 2015) மாயாஜால கதைகள், கலக்கலான காமிக்ஸ், அறிவியல் உண்மைகள், வரலாற்று நிகழ்வுகள், விளையாட்டுப் புதிர்கள் எனக் குழந்தைகளுக்கான அத்தனை தளங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி, கிட்டதட்ட மூன்று தலைமுறை சிறார்களின் வாசிப்பு உலகைக் குதூகலப்படுத்திய ஒரு தமிழ்ச் சிறார் எழுத்தாளர் . 50, ஆண்டுகளுக்கு முன்பே, 'மருத்துவம் பிறந்த கதை', 'உலகத்தின் கதை', 'விஞ்ஞான வித்தைகள்' 'அறிவியல் சோதனைகள்' எனப் பல்வேறு தலைப்புகளில் சிறார்களுக்காக எளிமையாகவும் மிகத் தெளிவாகவும் எழுதியவர் வாண்டுமாமா. இதற்கான தகவல்களை எல்லாம் திரட்டியதில் கடுமையான உழைப்பு இருந்தது. எந்த அளவுக்கு எழுதினாரோ, அதற்குப் பல மடங்கு படித்தவர் அவர். 'பூந்தளிர்' என்கிற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, அலுவலகத்தில் இரண்டு பீரோக்கள் நிறையப் புத்தகங்களை வைத்திருந்தார். எல்லாமே அறிவியல், பொது அறிவு சம்பந்தப்பட்ட ஆங்கிலப் புத்தகங்கள். தேடித் தேடி வாங்கி, தமிழ் சிறுவர் உலகுக்கு அளித்தா
Comments