இதே நாளில்தான் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார்

 வரலாற்றில் இன்று. ஜூன் 30 -ம் தேதி. 1977-ம் ஆண்டு இதே நாளில்தான்  எம்.ஜி.ஆர் தமிழகத்தின் முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். தி.மு.க விலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கிய எம்.ஜி. ராமச்சந்திரன் பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவி ஏற்பு விழா சென்னை ராஜாஜி மண்டபத்தில் நடந்தது.





அப்போதைய தமிழக ஆளுநர் திரு பட்வாரி, எம்.ஜி.ஆருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு உறுதிமொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் கவர்னர் ஆங்கிலத்தில் படித்தார். அந்த வாசகங்களை எம்.ஜி.ஆர். தமிழில் கூறி, பதவி ஏற்றார். அவரோடு 14 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,