சைபர் குற்றங்களைப் பற்றி எவ்வாறு புகார் அளிப்பது?ஒரு அலசல்

 சைபர் குற்றங்களைப் பற்றி எவ்வாறு புகார் அளிப்பது?ஒரு அலசல் 👉👉இன்றைய டிஜிட்டல் உலகில் குற்றங்களும் அதிகம் டிஜிட்டலாக நடைபெறுகின்றன.


👉👉தகவல் திருட்டுக்களாக, பண மோசடிகளாக, சமூக வலைதள அவதூறுகளாக எனக் குற்றங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றன.


👉👉இந்த சைபர் குற்றங்கள் குறித்து எங்குப் புகார் அளிப்பது என நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.


👉👉மேலும், இவையெல்லாம் சைபர் குற்றங்கள் என பொதுவாக சில குற்றங்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் எவையெல்லாம் சைபர் குற்றங்களுக்குள் அடங்கும் எனத் தெளிவாக நமக்குத் தெரிவதில்லை.  


👉👉நம் கையிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைபேசி, இணையம், கணினி இவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்களுக்குள் தான் அடங்கும்.


👉👉உதாரணத்திற்கு‌ சில குற்றங்களைச் சொல்லலாம். நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது, உங்களுடைய கைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு ஃபோன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது, இணைய வழி பரிவர்த்தனையில் உங்கள் பணத்தைத் திருடுவது இவை அனைத்துமே சைபர் குற்றங்கள்தான்.


சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் எவ்வாறு புகார் கொடுக்கலாம்?👇👇


👉👉சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு மூன்று வழிகள் உள்ளன.


👉👉சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகாரளிப்பதற்கு அரசாங்கத்தின் வலைதளப்பக்கம் ஒன்றுள்ளது. www.cybercrime.gov.in என்ற தளத்தில் நீங்கள் புகார் தரலாம். இந்த வலைதளத்தில் உங்களுடைய புகாரைப் பதிவு செய்த பின்னர் புகார் விசாரணைக்கு வரும்போது காவல்துறையே உங்களைத் தொடர்பு கொண்டு விசாரிப்பார்கள்.


👉👉இரண்டாவது நீங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் எந்த காவல் நிலையத்திலும் சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்யலாம்.


👉👉மூன்றாவது சைபர் குற்றங்களை விசாரிப்பதற்கென்று இருக்கும் சிறப்புப் பிரிவுகளிலும் நீங்கள் புகாரளிக்கலாம்.


👉👉சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது ஏதாவது உதவி தேவைப்பட்டாலோ அதற்கு அரசின்‌ ஒரு உதவி எண்ணும் உள்ளது.


👉👉சைபர் குற்றங்கள் தொடர்பாகப் புகார் அளிப்பதற்கு உதவும் எண்: 155260.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,