மாம்பழத்தை விட அதன் தோலில்தான் அதிக ஊட்டச்சத்து இருக்கிறதா.?

 மாம்பழத்தை விட அதன் தோலில்தான் அதிக ஊட்டச்சத்து இருக்கிறதா.?



மாம்பழங்களின் தோலை சாப்பிடுவது உடலுக்கு எப்படி நன்மைகளை தருகிறது.?


மாம்பழ தோலில் தாவர கலவைகள் (plant compounds), நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. இவை நோய்களை தடுக்கவும், வயதாகும் செயல்முறையை மெதுவாக்கவும் உதவுகின்றன. அது மட்டுமின்றி, வைட்டமின் ஏ, சி, பி6, கே, ஃபோலேட், மெக்னீசியம், கோலின், பொட்டாசியம், காப்பர் போன்ற சத்துக்கள் மாம்பழத் தோலில் நிறைந்துள்ளன. மாம்பழ தோல் :ஃபோலேட், வைட்டமின் ஏ, , சி, உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும்.


 


அதிக நார்ச்சத்து:


மாம்பழத்தோல் மிக அதிக நார்ச்சத்து கொண்டது. இதனால் மாம்பழத்தோல் செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லது. மாம்பழத்தோலில் உள்ள அதிக நார்ச்சத்து இதய நோயைத் தடுக்கவும் உதவும். மாம்பழத்தோலை உட்கொண்ட ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு சுமார் 40% குறைவு என்பது தெரிய வந்துள்ளது.


நீரிழிவு நோயாளிகளுக்கு உதவ கூடியது:


மாம்பழ தோலை உட்கொள்வது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.  உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. 


சரும ஆரோக்கியத்திற்கு நன்மை:


காய்ந்த மாம்பழ தோல்களை ஃபேஷியல் பொருளாக மீண்டும் பயன்படுத்தலாம். உலர்ந்த மாம்பழ தோலைப் பொடி செய்து அதை தயிரில் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இந்த ஃபேஸ் பேக் கோடைக்காலத்தில் சருமத்தை பராமரிக்க சிறப்பாக உதவும். மேலும் இந்த மாம்பழ தோல் ஃபேஸ் பேக், மந்தமான சருமத்திற்கு இயற்கையான தீர்வாகவும், திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றவும் 

புற்றுநோய்க்கு எதிராக..


மாம்பழத் தோல்களில் மாங்கிஃபெரின், நோராதைரியோல் மற்றும் ரெஸ்வெராட்ரோல் உள்ளன. இவை நுரையீரல், பெருங்குடல், மார்பகம், மூளை மற்றும் முதுகுத் தண்டு புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை தடுக்க அல்லது எதிர்த்து போராட உதவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடென்ட்ஸ் ஆகும்.


மாம்பழ தோலை எப்படி சாப்பிடலாம்.!


ஆப்பிள், பேரிக்காய் அல்லது பீச் போன்ற பழங்களை தோலை அகற்றாமல் கடித்து சாப்பிடுவது போல மாம்பழத்தை உட்கொள்வதே எளிதான வழி. மாம்பழத்தை சாப்பிடும் உன் அதன் தோலை நன்கு கழுவி பின்னர் பழத்தை தோலுடன் கடித்து   சாப்பிடவும்.   தோலை சுத்தம் செய்து கழுவி பின் வறுத்து சட்னி மற்றும் டிப்ஸிலும் (dips) கூட சேர்க்கலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி