பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம்
இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றிய பி. வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று (1921 ஜூன் 28 ). தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே.. ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பின்னர் 1991 முதல் 1996 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் பல மொழிகளில் வல்லுனராக விளங்கினார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தார், அயோத்தியில் ராமர் கோயில் கர சேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போது பிரதமராயிருந்த நரசிம்மராவ் அதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இவர் மீது உள்ளது.
Comments