நயன்தாரா,

 மலையாள திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நயன்தாரா, தொடர்ந்து தமிழ் திரையுலகில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படத்திதன் மூலம் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ளார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த அறிமுக நடிகையென பலரால் கௌரவிக்கப்பட்டார்.






இவர் தனது இரண்டாவது படமான பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தார். 2006ஆம் ஆண்டு லட்சுமி என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளில் உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக வைத்து எடுக்க பட்ட டோரா, அறம், கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், போன்ற படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றார். இவர் இதற்கு முன்பு நடித்த படங்களில் டப்பிங் குரலே கொடுக்கப்பட்டது.

திரைத்துறையில் இவர் அளித்த பங்களிப்புக்காக 2010 ஆம் ஆண்டு நயன்தாராவுக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழ் நாடு அரசு கவுரவப்படுத்தியது
ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுள்ளார்
தமிழ் நாடு ஸ்டேட் அவார்ட் ஒரு முறை பெற்றுள்ளார்.


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு மாவட்டத்தில் 18நவம்பர் 1984ம் ஆண்டு பிறந்தார் இவர்,கர்நாடகா மாநிலத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பால் இவர் ஒரு மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். நயன்தாராவின் தந்தை இந்திய விமான படையில் பணியாற்றிவந்தவர், ஆகையால் இவர் தன் பள்ளி படிப்பினை ஜாம்நகர், குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் படிக்கவேண்டிய நிலை வந்தது ஆனால் இவர் அதனை எல்லாம் பெரிதும் பொருட்படுத்தாமல் சிறப்பாக படித்து தனது பள்ளி படிப்பினை படித்து முடித்தார். அதன் பின் கேரள மாநிலத்தில் உள்ள மார்தோமா என்ற கல்லூரியில் படித்து தனது இளங்கலை பட்டத்தினை வென்றார்.
நடிகை நயன்தாராவிற்கு லெனோ எனும் தம்பி உள்ளார், இவர் தற்போது துபாய் நாட்டில் வாழ்ந்து வருகிறார். இவர் கல்லூரி படிக்கும்போதில் இருந்தே மாடலிங் துறையில் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு தான் பணியாற்றிய மாடலிங் துறையின் மூலம். பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் சத்யன் அந்திக்காடு அறிமுகம் கிடைத்து அதன் பின் அவருடன் இணைந்து “மனஸ்ஸினைக்கற” என்ற திரைப்படத்தில் நடித்து மலையாள திரைத்துறையில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் இன்று காலை 10:20 மணி அளவில் ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கும் ஷெரட்டன் கிராண்ட் நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணத்திற்கு 25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.
இவர்களுடைய திருமண விழாவிற்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய் சேதுபதி, வசந்த் ரவி, பொன்வண்ணன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர்கள் கே.எஸ். ரவிக்குமார், அட்லீ, நெல்சன் தயாரிப்பாளர்கள் லலித் குமார், போனி கபூர், டிரைடன் ரவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் இந்த திருமண விழாவில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்து விழாவை சிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தமிழகத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்கள், முதியவர்கள் கோவில்கள் என மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,