உலக தந்தையர் தினம்
இன்று ஜூன் 19 -உலக தந்தையர் தினம் - ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை உலக தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது தாய் ஒரு குழந்தையை கருவில் 10 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்தார் என்றால், குழந்தையை தனது தோள்மீது தூக்கி சுமந்து வளர்ப்பவர் தந்தைதான். அன்பை கூட அதட்டலாக வெளிப்படுத்துவதான் தந்தையின் சிறப்பு.
நம்மை படிக்க வைத்து ஆளாக்கிய தந்தைக்கு நாம் செய்யும் கைமாறு என்ன தெரியுமா? இவனுடைய தந்தை இந்த அருமையான மகனைப் பெறுவதற்கு எத்தகைய கடும் தவத்தை செய்தானோ என்றும் மெச்சும் அளவிற்கு நாம் நம்முடைய தந்தைக்கு மரியாதையை தேடித்தரவேண்டும் என்று வள்ளுவரே கூறியுள்ளார்.
வீட்டுக்கான கடமையை தாய் கற்றுத் தருகிறார். எனினும் வீட்டுக்கும் நாட்டுக்கும் சமூகத்திற்கு மான கடமையை தந்தையின் வழிநின்றே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலேயே தந்தைக்கு கூடுதல் பொறுப்பு கூடிவிடுகிறது. அதனால் தான் நமது இலக்கியங்களில் தாயிக்கு இணையாக தந்தையும் போற்றப்படுகிறார். அந்த போற்றுதல் இன்றைய நவீன உலகிலும் தொடர்வதை நாம் பார்க்க முடியும். கதைகளின் வாயிலாக, ஒரு கலைப்படைப்பின் வாயிலாக, திரைப்படங்கள் வாயிலாக என தந்தையின் அன்பு என்றும் போற்றப்பட்டு வருகிறது.
குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னையே மெழுகுவர்த்தியாய் அர்ப்பணித்த அனைத்து தந்தையர்களுக்கும் அன்பார்ந்த தந்தையர் தின வாழ்த்துகள்!
Comments