ஹெலன் கெல்லர் பிறந்த நாள்
இன்று புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர் பிறந்த நாள் !(Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாநகரத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். ஆசிரியர், ஆரசியல் ஆர்வளர், விரிவுரையாளர் என பல பரிமாணங்களை கொண்ட இவர் அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் பிரெய்லி முறையில் கல்வி கற்று தேர்ச்சியடைந்தார்
தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். பிரெய்லி முறையில் கல்வி பயின்ற ஹெலனின் கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்பு களில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது
Comments