கு. சின்னப்பபாரதி (Ku.Chinnappa Bharathi)
(02.05.1935 - 13.06.2022)
முதுபெரும் எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி உடல் நலக் குறைவால் காலமானார்
17.12.2017 மாலை த.மு.எ.க.சங்கம் அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் “கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை “விருது விழாவிற்கு எம்மை அழைத்திருந்தனர்.
அன்று தான் சின்னப்ப பாரதியை நேரில் பார்த்தேன். பேசினேன்.
கம்யூனிச கட்சியின் முழுநேர ஊழியரான என் தந்தையும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த என் தாயும் ‘அரிவாள் சம்மட்டி’ யைத் தாலியாக்கிய திருமணப் படத்தை 1963 இல் முழு அரசியல் பத்திரிகையான ‘தேசாபிமானி’யில் பிரசுரித்திருந்தார்கள். அதை நாங்கள் சிறுவயதில் அடிக்கடி எடுத்துப் பார்ப்போம் . அந்நேரங்களில் எச். எம்.பி.முகைதீன்,
கே.இராமநாதன், சின்னப்பபாரதி பற்றிச் சொல்லுவார்கள்.
அவரைப் பார்த்ததும் அது பற்றிச் சொல்லி என் அம்மாவையும் பேசவைக்கக் கிடைத்தது.
இந்திய மதிப்பில் ஒரு இலட்சம் என்பது மிகப்பெரும் தொகையே. எமக்குக் கிடைக்கும் மேலதிக பணம் மீண்டும் சமூகத்திற்கானதாக போய்ச் சேரவேண்டும் என்பதை அவரிடமிருந்து அன்றே கைக்கொண்டோம். கட்சிக்கும். ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாட்டிற்கும். கே ஏ சுப்பிரமணியம் நூலகத்திற்கும் அது பகிர்ந்தளிக்கப்பட்டது. அவரது பணமே நூலகத்தின் ஆரம்பத்திற்கான முதல் படி!
தனது எழுத்து மூலம் கிடைத்த பணத்தை மீண்டும் முற்போக்கான இலக்கிய படைப்புகளுக்கே தன் அறக்கட்டளை மூலம் அந்த செஞ்சால்வை மனிதர் செய்து வந்தார்.
எண்பதுகளைத் தொட்ட மனிதர் போல்ல்லாது உலக நடப்பு, உள்ளூர் நடப்புவரை அனைத்தையும் அறிந்து வைத்திருந்தார். 13 மொழிகளில் அவரது எழுத்துகள் மொழியாக்கம் பெற்றுள்ளன. பல நாடுகளில் நடந்த பல நிகழ்வுகளில் கலந்து தனது கருத்துகளை சமரசமின்றி தெரிவித்துள்ளார்.
தன் வாழ்வை கொண்ட கோட்பாட்டுடன் வாழ்ந்த செம்மனிதனுக்கு பெருமையுடன் வணக்கம்!
சென்று வாருங்கள் தோழரே!
விடைபெறுதல் நிகழ்வு நாமக்கல் மின்மயானத்தில் நடைபெறும் .
ஜூன் 14 பிற்பகல் 1.30 மணி அளவில் இறுதி ஊர்வலம் நடைபெறும்.
முகவரி: நாமக்கல், முல்லைநகர், பெந்தகோஸ்த் சர்ச் அருகில், 1/174 செல்லம்மாள் இல்லம்.
தொடர்பிற்கான இலக்கம்
+91 944 226 4733
———————————-
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பரமத்தி சொந்த ஊராகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் மு. வரதராசன்எழுத்துக்களின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. பாரதியாரின்கவிதைகளும் பொதுவுடமைக் கட்சியும் நெருக்கமாயின. மாணவர் அமைப்புகளை, இயக்கங்களை நடத்தினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முழு நேர ஊழியராக 1960 ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கினார். கல்லூரி நாட்களில் நில உச்சவரம்புப் போராட்டத்திற்காக 650 கி.மீ நடைப்பயணம் சென்றார்.
மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய – சுரங்கம் , தாகம் நாவல்கள் இலங்கையிலும் சிங்கள மொழிமூலம் உபாலி லீலாரத்னா அவர்களால் மொழியாக்கம் பெற்றது. தோழர் பா. ஜீவானந்தம் இலங்கையின் பல பாகங்களில் தலைமறைவாக இருந்த காலத் தொடர்புகளை விடாது பேணியபடி தோழர் சின்னப்பபாரதி இருந்து வந்தார்.
அவரது எழுத்துகள்:-
புதினங்கள்
தொகு
தாகம்
சங்கம்
சர்க்கரை
பவளாயி
சுரங்கம்
தலைமுறை மாற்றம்
பாலை நில ரோஜா
சிறுகதைகள்
தொகு
கௌரவம்
தெய்வமாய் நின்றான்
கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் மூலம் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், சமூகசேவை, நாடகம், கவிதை மற்றும் சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
(மேலதிக தகவல்
யு.எஸ்.பி.கட்சியின் சார்பில் 1946 இல் ‘தேசாபிமானி ‘என்ற இதழ் முழு அரசியல் வாராந்திர பத்திரிகயாக வெளி வந்தது..
யு.எஸ்.பி.கட்சி, பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி என்று பெயரை மாற்றிக்கொண்டது.
கே.இராமநாதனும் இணைந்து கே.கணேஸ் நடத்திய ‘பாரதி ‘ பத்திரிகை எழுத்தாளர்கள், தேசாபிமானி எழுத்தாளர்கள், நவசக்திஎழுத்தாளர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில். செ.கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், ,அ.ந.கந்தசாமி முதலியோரும் ஆரம்ப முயற்சிக்குப் பக்கபலமாக நின்றனர்.பிற்காலத்தே பிரேம்ஜி , இளங்கீரன், என். கே.ரகுநாதன், எச். எம்.பி.முகைதீன்,எஸ்.பொ., கைலாசபதி, சிவத்தம்பி, டொமினிக் ஜீவா, டானியல், பி.இராமநாதன்,நீர்வைப் பொன்னையன், முருகபூபதி, சோமகாந்தன் போன்றோர் இணைந்துகொண்டனர். பின்னர் இதிலிருந்து கொள்கை முரண்பாடுகள் காரணமாகசிலர் பிரிந்து சென்றது வருந்தத்தக்கது.)
No comments:
Post a Comment