ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்பட விமரிசனம்
 

: . ஒரு நிகழ்வில்  இந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான நடிகர் மாதவன் ராக்கெட் விடுமுன்னர் விஞ்ஞானிகள்  பஞ்சாங்கம் பார்க்கிறார்கள் என்று ஒரு கருத்தை கூற அது பகுத்தறிவாளர்களின் கடுமையான விமரிசனங்களுக்கு ஆளானது.   ஆனால் இந்த படத்தில் அப்படிப்பட்ட கருத்து எதுவும் கூறப்படவில்லை. ராக்கெட் விடுமுன்னர் பூஜை புனஸ்காரங்கள் கூட எதுவும் செய்யப்படவில்லை. அறிவியல் மட்டுமே பேசப்படுகிறது. எந்த ஒரு கேரக்டரும் பார்ப்பன பாஷை  பேசவில்லை.  எந்த ஒரு ஜாதி மதமும் உயர்த்தபடவில்லை, ஓரம்கட்டப்படவும் இல்லை  இஸ்ரோ நிறுவனத்தின்  விஞ்ஞானி நம்பி நாராயணன் ராக்கெட் தொழில் நுட்பங்களை வெளிநாடுகளிலிருந்து கற்று இந்தியாவுக்கு கொண்டு வந்த திறன் கிரையோஜெனிக் எஞ்சின்களை சோவியத் யூனியனிலிருந்து வாங்கி இந்தியாவுக்கு கொண்டுவந்த சாகசம் அதன் பின்னர் அவர் மீது  சுமத்தப்பட்ட பொய்யான தேசதுரோக குற்றசாட்டு, வீண் பழி அதனால் அவரும் அவருடைய குடும்பத்தாரும் பட்ட இன்னல்கள் அந்த பழியிலிருந்து  அவர் எப்படி மீண்டு வந்தார்  என்பதை விவரிக்கும் படம்தான் ராக்கெட்ரி  நம்பி விளைவு. இந்தியா ராக்கெட் தொழில் நுட்பம் அடைவதில் அமேரிக்கா எப்படியெல்லாம் தடையாக இருந்தது என்பது காட்டப்படுகிறது. இந்திய ராக்கெட் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ரஷ்யா எவ்வாறு பேருதவி செய்தது என்பது காட்டப்படுகிறது. கிரையோஜெனிக் எந்திரங்களை இந்தியாவுக்கு தரக்கூடாது என்று அமெரிக்க அரசாங்கம்  முன்னாள் சோவியத் யூனியனுக்கு விதித்த தடைகள் அந்த தடைகளையும் மீறி சோவியத் யூனியன் ராக்கெட் தொழில் நுட்பங்களை மிக குறைந்த விலைக்கு இந்தியாவுக்கு தந்த உண்மை வரலாறு காட்டப்படுகிறது.   அறிவியல் பூர்வமான காட்சிகள் படம் முழுவதும் நிரம்பியுள்ளன. இவற்றுக்கிடையில் மனித நேய உணர்வுகளும்  வில்லத்தனங்களும்  மாறி மாறி தாக்குகின்றன. ஆசாபாசங்களை சுமந்து கொண்டு குடும்ப உறவுகள் வருகிறார்கள் .  பல கோடிகள் சம்பளத்துடன் அமெரிக்க நாசா கொடுத்த வேலை வாய்ப்பை உதறிவிட்டு இந்தியாவின் இஸ்ரோவிலேயே தொடர்ந்து பணியாற்றிய தேசபக்தர் பாரத ரத்னா விருது கொடுத்து பாராட்டப்படவேண்டிய அவருக்கு எதிராக பொய் வழக்கு போட்டு அவரை இந்த நாடு சித்திரவதை செய்து சீரழித்ததை  இந்த  படம் உணர்ச்சி பூர்வமாக காட்டுகிறது நம்பி நாராயணனுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 10 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கியிருந்த சூழ்நிலையில் கேரளா இடதுசாரி அரசாங்கம் அவருக்கு 1.3 கோடி ருபாய் கூடுதலாக இழப்பீடு வழங்கியது காட்டப்படுகிறது. நம்பி நாராயணன் நிரபராதி என்றால் குற்றவாளி யார் என்கிற கேள்வியோடு படம் முடிகிறது. 


shareComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,